இலங்கையை விட மோசமாக மாறியுள்ள பாகிஸ்தான் - இம்ரான் கான் குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாகியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரு வலுவான அரசாங்கம் பொது ஆணையுடன் நாட்டை அதன் பொருளாதார புதைகுழியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
அரசியல் ஸ்திரமின்மை
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றே ஒரே தீர்வு என்றும் இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
[VYSB5F ]
அண்மையில் ப்ளூம்பெர்க்கில் வெளியான அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள அவர், பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இலங்கையை விட மோசமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இன்று, இலங்கையை விட பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
you may like this Video