பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷியா பயணம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை அவர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும், இந்த பயணத்தின்போது அவர் அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது நடந்தால் கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
ரஷியா-உக்ரைன் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் இம்ரான்கானின் இந்த ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் விளாடிமிர் புதின், இம்ரான்கான் ஆகிய இருவரும் நேரில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam