பாகிஸ்தான் பிரதமர் பாராளுமன்றம் செல்லாத இரகசியம்! பின்னணியில் மிக முக்கிய நாடு
பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை நிறுத்தப்பட்டமைக்கு ஜனாசா அடக்கம் தொடர்பான விடயமே காரணமாக இருக்கும் என தாம் நம்புவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிடுகையில்,
பாகிஸ்தான் பிரதமர் நாடாளுமன்றத்திலே பேசுவதாக முன்னர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் நாங்கள் நேரம் கேட்டதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
எனவே அவரின் நாடாளுமன்ற உரையைக் கூட நிறுத்தியதற்கு, அவர் அங்கு வந்தால் ஜனாசா அடக்கம் தொடர்பான விடயத்தை நாங்கள் பேசிவிடுவோம், இல்லையெனில் இது தொடர்பில் பிரதமருக்கு பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்பதே காரணம் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த காரணத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டினார்.