இந்தியாவிற்கு பாகிஸ்தான் எம்.பி விடுத்துள்ள எச்சரிக்கை!
இந்தியாவை (India) தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் (Pakistan) இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளது.இதனையடுத்தே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி, பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்த இந்தியா துணிந்தால், முழு அளவிலான போருக்கு தயாராக இருக்க வேண்டும்.
எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் காட்சிக்கு இல்லை. நாடு முழுவதும் அணு ஆயுதங்களை எங்கு வைத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது.
நான் மீண்டும் கூறுகிறேன். இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள், அவை அனைத்தும் இந்தியாவை குறி வைக்கின்றன எனத் தெரிவி்த்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
