'பாகிஸ்தான் திவாலாகிவிட்டது' : பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்...!
மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், ஏற்கனவே திவாலாகிவிட்டது. திவாலாகிவிட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முமகத் அசிப் (Khawaja Muhammad Asif) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18.02.2023) பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், வெளிநாட்டு உதவிகளைக் கோரி வருகின்றது.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்தாலும், அது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, வருமானத்தை அதிகரிக்க வரி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிர்ப்பந்தித்ததால் அங்கு அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பணவீக்கம்
கடந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5 சதவீதமாக உயர்ந்தது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தைவிட 30சதவீதம் முதல் 50சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தற்போது பாகிஸ்தானில் ஒரு லீட்டர் பால் விலை 250 ரூபாவுக்கும், இறைச்சி 750 ரூபாவுக்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாக மாறி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற விழாவில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமத் அசிப்,
சர்வதேச நாணய நிதியம்
“பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டது. இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைவரும் பொறுப்பு. திவாலான நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். நமது பிரச்சினைகளுக்கான தீர்வு நமது நாட்டிலேயே உள்ளது.
பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்குச் சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வு இல்லை. மேலும், நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்டு, பாகிஸ்தானில் மீண்டும் அமைதியின்மை ஏற்படக் காரணமாக இருந்ததே முந்தைய இம்ரான் கான் அரசு தான். இவர்கள் செய்த காரியங்களால் நாடே திவாலாகிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
