இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரின் வடக்கு மாகாண விஜயம்
இலங்கைக்கான பாகிஸ்தானிய (Pakistan) உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அசிஸ் (Faheem Ul Aziz HI) மன்னாருக்கு அண்மையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அவர் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்றதுடன் உள்ளூர் விவசாயிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், உற்பத்தி விவசாயத் துறையானது, உள்ளூர் சமூகங்களின் தன்னம்பிக்கைக்கு உதவக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
விவசாயப் பொருளாதாரம்
மேலும், சொட்டு நீர்ப்பாசன முறை, விதைகள் மற்றும் தரமான உரங்கள் போன்றவற்றை வழங்குவதன் மூலம் இலங்கை மக்களுக்கு உதவும் குறித்த அரச சார்பற்ற அமைப்பின் திட்டங்களை அவர் வரவேற்று பேசியுள்ளார்.
அது மாத்திரமன்றி, பாகிஸ்தான் ஒரு விவசாயப் பொருளாதாரம் எனவும் விவசாயத் துறையைப் பொறுத்தவரை அது நிறைய சலுகைகளைக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
