வெளிநாடொன்றில் விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தி : ஐவர் பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற MI-17 உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
இரு விமானிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர்
இந்த விபத்தில், இரு விமானிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
#BREAKING: A relief mission helicopter crashed in northwestern Pakistan, killing all five crew members, as torrential rains and flash floods in the region have left 164 people dead and 24 missing.#HelicopterCrash pic.twitter.com/jDcNGzOMaQ
— Veritas Daily (@VeritasDaily) August 15, 2025
வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கிச் செல்லும் போதே இந்த உலங்கு வானூர்தி கட்டுப்பாட்டை இழந்ததாகவும், மோசமான வானிலைதான் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் உள்ளவர்களால் இலங்கையில் இயக்கப்படும் ஆயுதக் குழுக்கள்! அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




