பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த விருப்பங்களாலேயே தீர்மானிக்கப்படும்:எஸ்.ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் எதிர்காலம் பெரும்பாலும் அதன் சொந்த நடவடிக்கைகள் மற்றும் விருப்பங்களாலேயே தீர்மானிக்கப்படும். அத்துடன் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை அந்த நாடே கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் போது அந்த நாட்டுக்கு இந்தியா உதவியது. இது மிகவும் வித்தியாசமான உறவு. எனினும் பாகிஸ்தானுடன் உள்ள உறவு அதற்கு பொருந்தாது.
பாகிஸ்தானின் பணவீக்கம்

பாகிஸ்தானின் எதிர்காலம் பெரும்பாலும் பாகிஸ்தானின் செயல்களாலும், பாகிஸ்தானின் தேர்வுகளாலும் தீர்மானிக்கப்படும்.
எவரும் ஒரு கடினமான சூழ்நிலையை திடீரென மற்றும் காரணமின்றி அடைவதில்லை. பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல், அதிக பணவீக்கம் மற்றும் அதன் நாணயத்தின் கூர்மையான தேய்மானம் உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இஸ்லாமாபாத் இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது, இது இருதரப்பு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது.
எனினும் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ தயாராக உள்ளது.
இந்தியா-இலங்கை உறவு

இலங்கையுடனான உறவு தொடர்பில், இந்திய மக்கள் மத்தியில் நல்லெண்ணம் நிறைய உள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமையை சமாளிக்க இந்தியா 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியிருந்தது.
அத்துடன் கடந்த மாதம், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவு கடிதத்தை
சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா
பெற்றது.”என கூறியுள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan