உலக கவனத்தை ஈர்த்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்திய விஜயம்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ (04.05.2023) இந்தியா செல்லவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலாவல் பூட்டோ இந்தியா செல்லவுள்ளார்.
2014 இல் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த போது அவர் இந்தியா சென்றிருந்தார். அதன் பின்னர் இந்தியா செல்லும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறை அமைச்சர்
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்தப் பயணம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவாவில் நடைபெறும் பிராந்திய சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இளவல் பூட்டோ சர்தார் இந்தியா செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டில் சீன மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
கடந்த 2001ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஈரான்இ ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
