பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை உற்றுநோக்கும் இந்திய ஊடகங்கள்!
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து, பாதுகாப்பு பிரதி அமைச்சர் உட்பட பிற உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் இராணுவத் தலைவர் பின்னவல யானைகள் சரணாலயம், சிகிரியா மற்றும் கண்டியில் உள்ள பல் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இராஜதந்திர வருகை
இருப்பினும், இந்தப் பயணம் ஒரு இராஜதந்திர வருகையை விட ஒரு ஆடம்பர விடுமுறையாக இருக்கும் என்ற குற்றச்சாட்டுகளை இந்திய ஊடகங்கள் முன்வைத்துள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயனங்கள் மடடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் இராணுவத் தளபதி ஒருவர் இராஜதந்திர நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்வதற்கான அடிப்படை என்ன என்பதை இந்திய தரப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |