இரு நாடுகளை கடன் ஒப்பந்தங்களுக்காக காத்திருக்க வைத்துள்ள சீனா
சீனா பாகிஸ்தானையும் இலங்கையையும் கடன் ஒப்பந்தங்களுக்காக காத்திருக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பீய்ஜிங்கின் உதவிக்காக நீண்டகால பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
எனினும் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றங்கள் இன்மையால், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடனான நிதியுதவி
சீனா, இந்த இரண்டு நாடுகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் 26 பில்லியன் டொலர்களை கடனாக கொடுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நிதியுதவி உடன்படிக்கையை எட்டியுள்ளது.
இதனையடுத்து அந்த நாடு, சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மறுசீரமைக்க முயல்கின்றது.
இலங்கையை பொறுத்தவரை, இலங்கையின் தற்போதைய கடனை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பெரும் கடனில் உள்ள பொருளாதாரத்திற்கு புதிய கடன்களை வழங்குவதையே விரும்புவதாக பீய்ஜிங் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு தொடர்ந்தும் நீண்ட கால அடிப்படையில் உதவப்போவதாக
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸதானிகரகம் இன்று அறிவித்துள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
