இரண்டுமே எங்களின் முக்கிய நட்பு நாடுகள்: ஜெய்சங்கருக்கு அமெரிக்கா பதில்
2018-க்குப் பிறகு முதன்முறையாக, பாகிஸ்தான் விமானப் படைக்கு எஃப்-16 விமானத்தையும், கடற்படை நிலைத்தன்மைக்காக 450 மில்லியன் டொலர் செலவில் இராணுவ தளவாடங்களையும் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக நியூயார்க்கில் உயர்மட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்,
ஜெய் சங்கர் விமர்சனம்
பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார்.
மேலும், “பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எஃப்-16 போர் விமானங்கள் எங்கு, யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நெட் பிரைஸின் பதில்
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், செய்தியாளர் சந்திப்பின்போது,
“இந்தியா, பாகிஸ்தானுடனான எங்கள் நாட்டின் உறவுகள் வெவ்வேறு முக்கியத்துவம் வாய்ந்தவை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவும், மறுபுறம், இந்தியாவுடனான எங்கள் உறவும் இரண்டும் கூட்டாளிகள் என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன.
எங்களுடையது ஒவ்வொன்றிலும் வெவ்வேறு முக்கிய தொடர்புகள் இருக்கின்றன. நாங்கள் இருவரையும் பங்காளிகளாகப் பார்க்கிறோம், ஏனென்றால் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களைக் கொண்டுள்ளோம். அதனால், இந்தியாவுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவு வேறு, பாகிஸ்தானுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவு வேறு" என விளக்கமளித்திருக்கிறார்.
May you like this Video