இலங்கைக்கு கடத்தபப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல இலட்சம் வலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வலி மாத்திரைகளை இன்று (25) பறிமுதல் செய்த ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கடத்தலுடன் தொடர்புடைய மூவரை கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்திரைகள் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த தலைத்தோப்பு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிஸார் தலை தோப்பு கடற்கரையில ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது டிராக்டரில் இருந்து பெட்டிகள் இறக்கி கொண்டிருந்தவர்கள் பொலிஸாரை கண்டதும் டிராக்டரை எடுத்துக்கொண்டு தப்பி சென்ற நிலையில் கடற்கரையில் விட்டு சென்ற தலா 80 கிலோ எடை கொண்ட 10 பெட்டிகளில் இலட்சக்கணக்கான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெருங்குளம் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிராக்டருடன் தப்பிச் சென்ற நபர்களை தீவிரமாக கியூ பிரிவு மற்றும் உச்சிப்புளி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
