தாய்லாந்தின் புதிய பிரதமராக இளம் வயது பெண்: காத்திருக்கும் சவால்கள்
தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சினின் மகளான பேடோங்டர்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) அந்த நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.
இதன்படி, 37 வயதில், அவர் நாட்டின் இளைய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.
அத்துடன், அவரது அத்தை யிங்லக்கிற்குப் பிறகு பிரதமர் பதவியில் அமரும் இரண்டாவது பெண்மணியாகவும் அவர் திகழ்கிறார்.
பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்
முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்த புதிய பிரதமர் தேர்வு இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தாய்லாந்தின் ஸ்தம்பிதமடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை புதிய தலைவர் பேடோங்டார்ன் எதிர்கொள்கிறார்.
இன்று நாடாளுமன்றின் 319 ஒப்புதல் மற்றும் 145 எதிராக வாக்குகளைப் பெற்ற பேடோங்டார்ன், கடந்த இரு தசாப்தங்களில் பிரதமராகப் பதவியேற்ற ஷினாவத்ரா குலத்தின் நான்காவது உறுப்பினர் ஆவார்.
அவரது தந்தை தக்சின் மற்றும் அத்தை யிங்லக் உட்பட மூவரும் இராணுவ சதி அல்லது அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்புகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |