நெல்லுக்கான கொள்வனவு விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நெல் கொள்வனவு செய்யப்படும் விலை குறித்து நெல் சந்தைப்படுத்தல் சபை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாய்க்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 132 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மெற்றிக் தொன்
சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்தே குறித்த தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிகளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாட்டில் முதல் அணுமின் நிலையம்! பணியைத் தொடங்கிய ரஷ்யா News Lankasri
