கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கை பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் போக நெற்செய்கை சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை முரசுமோட்டை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதம் கடந்த நெற் கதிர்கள் நீரில் மூழ்கி தற்பொழுது நெல் மணிகள் துர்நாற்றம் வீசுவதுடன் அவைகளை கைவிட வேண்டிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற வெள்ள அனர்த்தங்களில் கடந்த போகங்களிலும் விவசாயிகளின் நெற்செய்கை அழிவுறுவது வழமையாக உள்ளது. ஏற்கனவே ஏற்பட்டிருந்த அழிவுகளுக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
இம்முறை இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகமாக அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக பலரது நெற்செய்கை வயல்கள்நீரில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயிகளின் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆரம்பத்திலேயே இரணைமடு குளத்தின் நீரைதிறந்து விடப்பட்டிருக்குமாயின் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் போயிருக்கும் எனவும் தற்பொழுது நெற்செய்கை மேற்கொள்ளபடுவது இயற்கையுடன் பெரும் சவாலாகவே உள்ளது எனவும் விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது விவசாய நிலங்கள் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணைமடு குளத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்ற மேலதிக நீரை விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நீரை வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்துவிட்டு நெல்லுக்கான நிர்ணய விலையும் இல்லாது விவசாயிகள் திண்டாடுவதே வழமையாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
