வடக்கில் நெல் கொள்வனவுக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு! : நந்தகோபாலன் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான மு.நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நெல் ஆலைகள் ஊடாக போதிய நெல் கொள்வனவு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசி ஆக்கப்பட்டு ஏனைய கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடமாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்காக 15 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண நிதியிலிருந்து 25 மில்லியன் ரூபாய் இரண்டாம் கட்டமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3 மில்லியன், கராச்சி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 5 மில்லியன் ரூபா, யாழ் மாவட்டத்தில் கொடிகாமம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 5 மில்லியன், உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் மில்லியன் , துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 2 மில்லியன்.
மேலும், வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் 3 மில்லியன் ,
வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் 2 மில்லியன் என கூட்டுறவுச் சங்கங்களின்
ஆலைகளுக்கு நெல் கொள்வனவுக்காக குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என
அவர் மேலும் தெரிவித்தார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam