வவுனியாவில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து: ஒருவர் காயம்
வவுனியா - புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (13.03.2024)மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri