அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு போலி முகவரிக்கு அனுப்பப்படும் பொதிகள்
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் இன்று (07.12.2023 ) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொதிகள் கொழும்பு பகுதியில் உள்ள பல போலி முகவரிகளுக்கு பொதி மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 06 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போலி முகவரிகள் குறித்து விசாரணை
இதன்போது குஷ் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்ததை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 2 மாதங்களாக இந்த பொதிகளின் உரிமையாளர்கள் இதனை வந்து பெறாத காரணத்தினால் இந்த பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளை ஆய்வு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவை போலியான முகவரிகள் என கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri