பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்
பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2026ம் ஆண்டிற்கான பாதீடு 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் காலை 10:30 மணியளவில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வரவு செலவு திட்டம்
இதில் 2026ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு இடப்பட்டது. இதில் சபையின் 13 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்த நிலையில் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய தவிசாளர், மண்ணிற்க்காக மரணித்த மாவீரர்களுக்கும், அதன்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது. 2026ம் ஆண்டிற்க்கான பாதீடு தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசால் பச்சிலைப்பள்ளி பிரதேசசபைக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகள் குறைவாகவுள்ளது. வடமாகாணத்தின் முதலாவது வரவு, செலவுத் திட்டமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
தீர்வு
புதிய வரியாக சோலர் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களிடம் வரி அறவிடுவதாகவும், இப்பாதீட்டில் 142.2 மில்லியன் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அபிவிருத்தியோடு நின்றுவிடாது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற இனம், சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்க்காகவும் உழைக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்காக அரசு தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.


விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri