புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான தனது யோசனைகளை கையளித்த பொதுஜன பெரமுன
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று தனது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைத்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப சூழலில் நடைபெற்ற கூட்டத்தின் போது அந்த கட்சி தனது யோசனைகளை நிபுணர்கள் குழுவிடம் கையளித்துள்ளது.
அத்துடன் இந்த ஆணைக்குழுவிடம் தனது யோசனைகளை கையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு சென்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அங்கு பிரசன்னமாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.