மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதன் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோகநாதனுக்கு பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சிவயோகநாதன் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பகல் 12.30 மணியளவில் பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருடைய தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் ஸ்மார்ட் ஃபோன், சிம்கார்ட் உட்பட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam