சாமானியர்களின் பிரச்சினைக்கு தீர்வு: பி.எஸ்.எம். சார்ள்ஸ் முயற்சி
சாமானிய பொது மகன் ஒருவர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) இன்று (30/04/2024) இடம்பெற்ற சிறந்த விவசாய பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
மிக குறுகிய காலத்திற்குள் சிறந்த விவசாய பயிற்சி (GOOD AGRICULTURE PRACTICES) திட்டத்திற்குள் 2000 விவசாயிகளை உள்வாங்கியமை மிகச்சிறப்பான செயற்பாடு ஆகும்.
ஒருங்கிணைந்து செயற்படுதல்
அத்துடன், நவீன விவசாய பொறிமுறை தொடர்பான அறிவை இந்த திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாக காணப்பட வேண்டும் என்பதோடு இதற்காக மத்திய, மாகாண அமைச்சுக்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.
விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசப்படுவதில்லை. இந்த விடயம் தொடர்பில் அனைவரும் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.
பொதுமக்களுக்கான நிலையான மற்றும் சிறந்த சேவையினை வழங்க ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |