முக்கிய பதவி விலகலை இன்னும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்க உயர்மட்டம்
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவையின் அமைச்சர்கள் எழுப்பிய ஆட்சேபனையை அடுத்து, பிபி ஜெயசுந்தர தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக கலந்துரையாட அழைத்தபோதும், அதற்கு ஜெயசுந்தர, அந்த அழைப்புக்கு உரிய பதிலை வழங்காமையை அடுத்து அவர், தமது பதவி விலகலுக்காக நான்கு பக்க விளக்கத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ஜனாதிபதி கோடடாபய ராஜபக்ச, பிபி ஜெயசுந்தவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டால், 2022 புத்தாண்டின் முதல் வாரத்தில் ஜெயசுந்தர பதவி விலக வாய்ப்புள்ளது.
அதேநேரம் ஜனாதிபதியின் புதிய செயலாளராக நடப்பு நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரும் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளருமான அனுர திஸாநாயக்க, நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
