கோவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் பிரதமரிடம் வழங்கி வைப்பு
இரத்தத்தில் உள்ள ஒட்சிசன் அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் (PULSE OXIMETER) கலாநிதி போதாகம சந்திம தேரரினால் இன்று (06) அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் வசதிக்காகப் பகிர்ந்தளிப்பதற்காக இந்த துடிப்பு ஒக்சி மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொற்று நிலைமைக்கு மத்தியில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தைப் பாராட்டுவதாக களனி மாதெல்வத்த விகாராதிபதி கலாநிதி போதாகம சந்திம தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், அரசாங்கம் முன்னெடுத்துவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
