பிரித்தானியாவில் நாமலுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கிடைத்துள்ள நேரடி அறிக்கை..
பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனிலும் நாமல் ராஜபக்ச நடத்தவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தத்தினால் இந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று அவருக்கெதிராக மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர் தெரிவித்தார்.
இதற்காக பல தமிழ்புலம்பெயர் மக்கள் இரவிரவாக பல செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான முக்கிய பங்கு மாணவர்கள்தான ஆற்றியுள்ளார்கள என்று பிரித்தானியாவிலுள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் எமக்கு தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான ஒருகூட்டத்தை நடத்த முடியாத காரணத்தினால் தான் இந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஒக்ஸ்போர்ட் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் அவரின் அரசியல் வாழ்க்கையில் அதுஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. மேலும், அதுபோன்ற புகழ்மிக்க மேடைகளில் இனி அவர் பேசுவது குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan