வேகமாக உயர்ந்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்! விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு....
புதிய இணைப்பு
களனி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சற்று நேரத்திற்கு முன்பு, அளவீட்டில் நீர்மட்டம் 7.4 அடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டுத் தடை நிரம்பி வழிகிறது என்று கொழும்பு மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலைமை சுற்றியுள்ள தாழ்வான பிரதேசங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
இதனால் மாலபே-கடுவெல பகுதி மற்றும் அருகிலுள்ள பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri