கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: சூழலுக்கு பெரும் பாதிப்பு(Photos)
கிளிநொச்சி - கல்லாற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளவதனால் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறவைகள் சரணாலயமானது பாாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது, கண்டாவளை பறவைகள் சரணாலய பகுதிகளிலிருந்து, ஆனையிறவு, குங்சுப்பரந்தன், கல்லாறு, சுண்டிக்குளம் பகுதிகளுடாக நாளாந்தம் 80 முதல்100 கியூப் மணல் வரை சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் சட்டத்தை தடுக்க வேண்டியவர்களின் துணையுடனே இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பாரிய ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்.
காடுகள் அழிக்கப்படல்
மேலும், குறித்த கரையோரப் பகுதிகளிலே அயன மண்டல உலர்கலப்பு பசுமையான காடுகள் மற்றும் அயன மண்டல முட்புதர்காடுகள் என இருவகையான காடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறான காடுகள் கரையோரங்களையும் அண்டிய பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள், தும்பிகள், பறவையினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன.
மேற்படி தன்மையுடைய காடுகள் அழிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வுகளால் கரையோர காடுகள் அழிக்கப்படுவதுடன் அரிய வகை உயிரினங்களும் அழிவடைந்து வருகின்றது.
சூழல் பாதுகாப்பு நடவடிக்கை
இவ்வாறு காடுகளை அழிப்பதாலும் மண் அகழ்வுகளினாலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 120 வகையான தும்பி இனங்கள், 24 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள், 499 வகையான பறவையினங்கள் அழிவடைந்து சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இவற்றுக்கு மேலாக கடல் மட்டத்திலிருந்து அதிக ஆழத்துக்கு மணல் அகழ்வு மேற்கொள்வதனால் கடல் நீர் உட்புகுந்து நண்ணீர் உவர்நீராக மாறுகின்றது.
எனவே இவ்வாறான கடற் பாதிப்புக்களும், கரையோரப் பாதிப்புக்களும் சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புக்களையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது அவசியமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
