கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மக்கள் விசனம்(Photos)
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் கல்லாற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளவதனால் அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் தெரிவித்துள்ளதாவது, பறவைகள் சரணாலயப் பகுதியிலுள்ள கண்டல் காடுகள் அழிக்கப்பட்டு கடலின் நீர்மட்டத்தை விட அதிக ஆழத்தில் குழிகள் தோண்டப்படுவதினால் சுண்டிக்குளம் கடல் நீர் குடியிருப்புக்குள் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் தற்பொழுது இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் அகழ்வினால் பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் கல்லாற்று- சுண்டிகுளம் பகுதி வரை செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அச்சநிலை
மேலும், இந்த வீதி பாதிப்படைந்துள்ள நிலையில் நோயாளர் காவு வண்டி கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடருமாயின் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய அச்சநிலை எற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
