பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இருப்பினும், ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தமது விருப்ப வரிசையை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப வரிசை
இதனை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இணையவழி மூலம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடம்பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவை இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri