கடந்த வருட இறுதிக்குள் அகற்றப்பட்ட 78ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டடில் ஈடுபட்டுவரும் ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் குறித்த அகழ்வு பணி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின் மீள்குடியேற்றம் விவசாய நடவடிக்கைகள் உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளுர் பணியாளர்களை கொண்டு வெடிபொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளில் ஸார்ப் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் ( (SHARP) )நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம், கொக்காவில் பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை, கிளாலி, இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் தட்டுவன்கொட்டி ஆகிய பகுதியிலும் முப்;பத்தாறு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து எண்நூற்று இருபத்தொன்பது சதுரமீற்றர் பரப்பளவில் (3657829 sqm ) இருந்து எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |