வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் கடந்த வருடம் இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணவனுப்பல்கள் மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானமும், சுற்றுலாத்துறை மூலம் 3.2 பில்லியன் டொலர் வருமானமும் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்கொடையாக கிடைத்த பணம்
வெளிவிவகார அமைச்சில் இன்றைய தினம் (05.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை நன்கொடையாக சுமார் 85 பில்லியன் ரூபா பணம் கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |