இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் 610 பேர் பலி
இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
185 பெண்கள்
தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப் பணியாளர்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களினால் 7 மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் செம்பிறைச் சங்கத்தின் 4 பணியாளர்கள் மோதல்களில் உயிரிழந்தனர் என அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 18 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri