நாட்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 200 ஏக்கருக்கு மேல் நீரில் முழ்கிய விவசாய நிலங்கள்
திருகோணமலை - தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் உள்ள நெற் செய்கை மேற்கொள்ளப்படும் விவசாய வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வயல் நிலங்கள் மற்றும் பயிர்கள் முற்றாக நீரில் முழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
200 ஏக்கருக்கு அதிகமான நிலம் பாதிப்பு
குறிப்பாக, பெரும்போக நெற்செய்கைக்கான நிலங்களைத் தயார்படுத்தி வரும் விவசாயிகள், இதனால் பாதிக்கப்படக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் வயல் நிலங்களில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து, விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, தற்போது வரை சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
சில விவசாய நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில வயல் நிலங்கள் விதைப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் போது இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri