வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு - மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் நாளைய தினம்(23) ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(22.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடமேற்கு திசையில் (மேற்கு நோக்கிய சாய்வுடன்) நகரும்போது, மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதன் விளைவாக, 10°N மற்றும் 20°N அட்சரேகைக்கும், 80°E மற்றும் 95°E தீர்க்கரேகைக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுதல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தப் பகுதிகளில் தற்போது கடற்றொழில் அல்லது கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய தினம் வெளியான தரவுகளின் அடிப்படையில், அடுத்த 168 மணி நேரத்தில் இந்த அமைப்பு ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான நிகழ்தகவு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று, இந்த நிலைமை தொடர்பில் வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளை மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri