மே 9 வன்முறை சம்பவம்: இதுவரை 1348 பேர் கைது: நிஹால் தல்துவ
மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று (20) 128 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 99 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,348 ஆகவும், 654 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், 836 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
