ரவி கருணநாயக்கவை பார்வையிட வெளி நபர்களுக்கும் அனுமதியில்லை
பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் மேலும் 8 சந்தேக நபர்களை பார்வையிட எந்தவொரு வெளி நபர்களுக்கும் அனுமதியில்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாலும் வெளியில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருப்பதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் இதற்கு முன்னர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
கொழும்பு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தனிமைப்படுத்தும் முகமாக தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்காகவே கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri