மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு நோய் தாக்கம் (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனவும், டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் கு.சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் மிகவும் குறைந்தளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் மாதமாகும். ஆனால் என்றுமில்லாத வகையில் இந்த மாதம் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
மட்டக்களப்பு மாட்டத்தில் ஜனவரி தொடக்கம் இன்று வரையில் 700 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஒரு மாத காலத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதில் அரைவாசிப்பேர் மட்டக்களப்பு நகரப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் 35வயது மற்றும் 47வயதுடைய இரண்டு பேர் கறுவப்பங்கேணி பகுதியில் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இதுவொரு பாரதூர நிலைமையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் இவற்றினை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய காலத்திலிருக்கின்றோம். இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் பரீட்சை நிலையங்களை கள விஜயம் ஒன்றினூடாக பார்வையிட்டதுடன், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களாக இதன்போது இனங்கண்ட பாடசாலை நிர்வாகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கள விஜயத்தின் போது டெங்கு பரவ வாய்ப்புள்ள இடங்கள் என இனங்கானப்பட்ட பகுதிகள் துப்பரவு செய்யப்படாவிட்டால் எந்தவொரு உயர்வு, தாழ்வும் பாராது உச்சக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.









ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri