மாணவர் சமூகம் எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாக திகழ்கின்றது!- த.கலையரசன்

Students
By Independent Writer Feb 19, 2021 09:27 PM GMT
Report

மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம், கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பிரதேசத்திலே கடந்த காலங்களில் க.பொ.த சாதாரண தரத்துடன் பல மாணவர்கள் இடைவிலகலை மேற்கொள்வதாகத் தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

அந்த வகையில் அதற்கெல்லாம் ஒரு முடிவு இன்று கிடைத்திருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் பாடசாலைகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதனைத் தலைமை தாங்கி வழிநடத்துபவர்களின் கைகளிலேயே இருக்கின்றது.

அந்த வகையில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் மிகவும் சாதுரியமான, சமூகத்தில் அக்கறை கொண்ட அதிகாரியாகச் செயற்படுகின்றார். அதேபோன்று தான் இப்பாடசாலையின் அதிபர் அவர்களும். இவர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதோடு இப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை தன்நிறைவு அடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இவ்வாறான பிரதேசங்களில் பாடசாலைகள் தரமுயர்த்தப்படுகின்ற போது எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களை நாம் இங்கிருந்து உருவாக்க முடியும். தற்காலத்திலே க.பொ.த உயர்தரத்திலே இவ்வாறான பின்தங்கிய பிரதேசத்திலிருந்துதான் கூடுதலான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குக் காரணமென்னவென்றால் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிள்ளைகள், பெற்றோர்களுக்கு தான் தெரியும் கஷ்டத்தின் மத்தியில் கல்வியின் தேவைப்பாடு. அந்த வகையில் இந்தப் பிரதேசங்களின் பெற்றோர்களும் அதிக அக்கறையுடன் செயற்படுவது போன்று இப்பிரதேசங்களுக்குக் கல்வி கற்பிக்க வருகின்ற ஆசிரியர்களும் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றார்கள்.

இன்றைய தினம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இதற்கான வெளியீடுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற போதுதான் இதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியும். மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், கல்வியும், விவசாயமும் வீழ்ச்சியடைந்து போவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும். ஏனெனில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற பொழுது அந்த மாணவர் தொகை பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக எமக்குக் கிடைக்கப்படுகின்ற வளங்களும் குறையும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எமது வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட யுத்தத்தினால் பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல, அரசியல் மற்றும் இன ரீதியான விகிதாரசாரத்திலும் மிகவும் பின்னோக்கிய ஒரு நிலையிலேயே எமது தமிழ்ச் சமூகம் சென்றுள்ளது.

இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே நாங்கள் எமது இருப்புக்காகப் போராடி இன்று எமது இனரீதியான விகிதாசாரம் மிகவும் குறைக்கப்பட்ட ஒரு நிலைமையில் நிற்கின்றோம்.

தற்போது இருக்கின்ற எமது பொருளாதாரம் ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எமது மக்கள் அந்த விடயத்திலே அக்கறையுடன் செயற்பட வேண்டும். எதிர்காலத்திலே நாங்கள் எமது பிரதேசங்களில் நிலையாக வாழ வேண்டும் என்றால் எமது அரசியல், கல்வி,பொருளாதாரம், அபிவிருத்தி என்ற ரீதியில் நாங்கள் முன்னோக்கிப் போகவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அத்துடன், கல்வி ரீதியில் உயர் பதவிகளில் இருப்பவர், அரசியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது சமூக ரீதியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் என்ற காரணத்தினால் சமப்படுத்தல் என்ற விடயத்தைக் கொண்டு வந்தார்கள். 2015ம் ஆண்டுக்கு முன்னர் இந்த விடயத்தினால் மிகப் பாரிய அனர்த்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதனை நாங்கள் அப்போது தட்டிக் கேட்டோம். அவ்வாறு தட்டிக்கேட்ட போது மாகாணசபையைக் கூட நடத்தாமல் இழுத்து மூடிய வரலாறுகளும் உண்டு. எனவே நாங்கள் எமது சமூகத்தின் விடயங்கள் தொடர்பில் மிகவும் நிதானமாக ஜனநாயக ரீதியில் போராட வேண்டிய நிலைப்பாடு காணப்படுகின்றது.

எனவே பெற்றோர்களே எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளை நல்ல கல்வியலாளர்களாக உருவாக்கி எமது பிரதேசங்களில் உங்கள் பிள்ளைகள் பணி செய்யக் கூடிய வகையிலே செயற்பட வேண்டும்.

நாங்கள் மாற்றுச் சமூகத்தைப் பற்றிக் கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. நாம் தான் எமது மக்களை முன்னேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிரிகளாகவே பார்க்கின்றார்கள்.

நாங்கள் எங்கள் மக்களின் ஜனநாயக உரிமையைக்கேட்கும் போது. அவர்கள் எங்களை வித்தியாசமான முறையிலே கையாளுகின்றார்கள். ஏனெனில் இந்த நாட்டிலே முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விடயமும் எமக்குப்பாதகமானதாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நாட்டிலே யுத்தம் முடிந்த கையோடு நாங்கள் சமாதானத்தை விரும்பினோம். சமாதானத்தை ஏற்படுத்தும் எவ்வித செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம் கையாளவில்லை. எங்களை எதிரிகளாகவும், அடிமைகளாகவுமே கையாளுகின்ற நிலைமையே இருக்கின்றது.

நாங்களும் முடிந்தவரை ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் உரிமைகளைவென்றெடுப்போம் என்ற அடிப்படையிலே செயற்படுகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US