எமது உயிருக்கு ஆபத்து: அச்சத்தில் விமல் வீரவன்ச!
"எமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (21.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, "நாங்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. அதுதான் முக்கியம்.
ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஓரிடத்தில் பேசுகின்றார், அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கூற வேண்டும் என்று இன்னும் ஒரு இடத்தில் பேசுகின்றார், அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் போகக்கூடாது என்று. அவர்கள் ஓரிடத்தில் இருந்தாலும் கொள்கையில் நிலையாக இல்லை.
நாங்கள் இடம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல. இது எமக்குச் சாதகமான கொள்கை அல்ல. இதனால் எதிரிகள் அதிகம் வளருவார்கள். எதிர்ப்புகள் கூடும். எமக்கு எதிரான தாக்குதல்கள் கூடும். மேலும், எமக்கு உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
நாட்டை நாசமாக்கிய மகிந்த தலைமையிலான அணியுடன் இணையமாட்டோம். அது ஒருபோதும் நடக்காது" எனத் தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
