பிரித்தானிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு - மனித உரிமைகள் விடயம் புறக்கணிப்பு
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Liz Truss மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது மனித உரிமைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகின்றதாக பிரித்தானிய தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ்ட் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் இட்டுள்ள பதிவொன்றில்,
பிரித்தானியா தலைமையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது.
It is simply appalling that there is no mention of human rights here. The Government of Sri Lanka flouted commitments made in UK-led UNHRC resolutions and presides over ongoing human rights abuses today. Has our Government abandoned its commitment to this issue? https://t.co/UrHrjDIpli
— Wes Streeting MP (@wesstreeting) October 27, 2021
அத்துடன் தற்போது இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு தலைமைத் தாங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கம், இந்த விடயத்தில் தமது உறுதிமொழியை கைவிட்டு விட்டதா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.