எமது அரசாங்கம் அரசியலமைப்பை மீறாது : அநுரகுமார தெரிவிப்பு
செப்டெம்பர் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டால், தமது கட்சி அரசியலமைப்பை மீறாது என்று கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியலமைப்பின்படி தமது கட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைவர்கள்
திவுலபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனினும் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுப் பதவிகளையும் ஒன்றரை மாதங்களுக்கு பொறுப்பேற்று அரசாங்கத்தை நடத்தலாம்.
இதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி போன்ற நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23ஆம் திகதியே புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளை நியமிக்கவுள்ளதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |