அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது ஓட்டமாவடி பிரதேச சபை..!
மட்டக்களப்பு, கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி, சுயேச்சைக் குழு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தலா ஓர் உறுப்பினர் ஆதரவுகளை வழங்கினர்.
பதவி நீக்கம்..
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்துக்கான தெரிவு நேற்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் நடைபெற்றபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |