ஆஸ்கார் விருது வென்ற இந்தியாவின் பிரபல சினிமா பாடல் (Video)
இந்தியாவில் வெளியாகி பாரிய வெற்றி அடைந்த RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது.
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கார் விருது வென்றார்.
நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் கீரவாணி
ஆஸ்கார் மேடையில் ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே விருது வென்ற RRR பட இசையமைப்பாளர் கீரவாணி நன்றி தெரிவித்தார்.
பிரமாண்டங்களை ஏற்படுத்தும் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஏற்கனவே இசையமைப்பாளர் ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றிருந்தார். சிலம்டாக் மில்லியனியர் படத்தின் சவுண்ட் ட்ராக் மற்றும் ஜெய் ஹோ பாடல் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri