நுவரெலியாவில் ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறை
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சி வழங்கும் "ஜனனி" வேலைத்திட்டம் நுவரெலியாவில் (16) சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் போது பெண்கள் எவ்வாறு ஊடக நெறிமுறையில் வித்தியசமான அணுகுமுறைகளைக் கையாளுதல், நெறிமுறையைப் பின்பற்றுவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பின் விரைவாக பேசப்பட்டு இது சம்பந்தப்பட்ட காணொளி காட்சி மூலம் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டு சிறப்பு வளவாளரால் விளக்கமளிக்கப்பட்டது.
கெப்பே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சி திட்டத்தின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான விடயங்கள் பங்குபற்றுனர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவை குறித்து விரிவாகப் பேசப்பட்ட சிறப்பான ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறையாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் கேள்விகள்
இதில் தேர்தல் காலங்களில் ஊடகவியலாளர்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு ஊடகங்களுக்கு முன் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இதில் கெப்பே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் , ஐரஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க ,கெப்பே அமைப்பின் கணக்காளர் மாலக்க வித்தாநாயக்க நுவரெலியா மாவட்ட கெப்பே அமைப்பின் அமைப்பாளர் அகில்ராஜ் மற்றும் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த “ஜனனி” வேலைத் திட்டம் முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது இரண்டாவது கட்டமாக 10 மாவட்டங்களுக்கான வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது
இதில் மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களில் மூன்று அமர்வுகளாக நடைபெற்று வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan