நாடாளுமன்ற உறுப்பினரின் தாக்குதலில் முன்னாள் அமைப்பாளர் காயம்
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் அவரது பாதுகாவலர்கள் தாக்கியத்தில் காயமடைந்த ஒருவர் பண்டாரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயங்கி விழுந்த முன்னாள் தொகுதி அமைப்பாளர்
இந்த நபர் பிரதேசத்தில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த போது, ஆடம்பர ஜீப் வண்டியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்துக்கொண்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த நேரத்தில் நபர் மயங்கி விழுந்துள்ளதுடன் பொலிஸ் அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைப்பாளரை தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
