இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ள முஸ்லிம் எய்ட் இலங்கை அமைப்பு
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக முஸ்லிம் எய்ட் இலங்கை ’அமைப்பு கிட்டத்தட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை நேற்று (ஜூலை 02) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது.
இதில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான 3 உயிர்க்காப்பு வென்டிலேட்டர்கள், 4 ஒக்ஸிஜன் சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கியிருந்தன.
இந்த நன்கொடை அமெரிக்காவில் உள்ள ‘அமெரிக்கர்ஸ்’ அமைப்பு மற்றும் பிரித்தானியாவின் முஸ்லீம் எய்ட்ஸ் தலைமையகத்துடன் இணைந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன , நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.







போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
