வடக்கு, கிழக்கில் இம்முறை பேரெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த ஏற்பாடு
தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு எங்கும் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பாட்டு ரீதியாக மௌனித்த பின்னர் வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு – கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியினரும் பல இடங்களில் பொது மக்களுடனும், மாவீரர்களின் உறவினர்களுடனும்
இணைந்து மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து வருகின்றனர்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
