ரிசாட் பதியுதீன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உத்தரவு
குற்றப்புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து உடனடியாக தம்மை, விடுவிக்க உத்தரவிடக்கோரி ரிசாட் பதியுதீன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுக்களை அழைப்பதற்கு இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதியரசர் விஜித் மலல்கொட, நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வு அக்டோபர் 15 ஆம் திகதி இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மனுதாரர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ரிஷாட் பதியுதீன், தமது மனுவில், பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளின் கீழ் தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறை ஏற்படுத்தும் அறிக்கைகள் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri