புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் குறித்த மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்க்கப்பட்டிருந்தன.
ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எழும்பு கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.
அகழ்வு பணி
அதனை அடுத்து , கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனை தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் நாளைய தினம் வியாழக்கிழமை அவ்விடத்தில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri